கொழும்பு புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களில் நடைபெறவுள்ள வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, இன்று (28.07.2026) மற்றும் இம் மாதம் 31ஆம் திகதிகளில் குறித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
உற்சவ நிகழ்வுகளுக்காக அதிகளவிலான பக்தர்கள் மற்றும் வாகனங்கள் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுவதால், புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்று பொலிஸ் பிறிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சாரதிகள் மற்றும் பொதுமக்களை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










