ஹொரணை மற்றும் பிலியந்தலைக்கு தடையற்ற நீர் விநியோகத் திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஹொரணை மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களுக்கு தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்யும் நோக்கில், கந்தனை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை அதிகரிக்கும் திட்டத்தின் பணிகள் 28.07.2026 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தலைமையில் இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது.

இத்திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 3,500 கன மீற்றர் (m³) கொள்ளளவு கொண்ட புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதன்மூலம் வறட்சி காலங்களிலும் தடையற்ற குடிநீர் விநியோகம் சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 1.28 பில்லியன் இலங்கை ரூபா செலவில் முன்னெடுக்கப்படுவதோடு, 2027 ஒக்டோபர் மாத இறுதிக்குள் இதன் கட்டுமானப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மதுராவல, புலத்சிங்ஹல மற்றும் மில்லனிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 10,000 குடும்பங்களை சேர்ந்த 40,324 மக்கள் இதன் மூலம் நேரடிப் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கந்தனை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 20 ஆண்டுகள் பழமையான குழாய்த் தொகுதியை நவீனமாக்கும் திட்டத்தின் கீழ், முதலாவது புதிகுழாய்த் தொகுதியும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects