ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் “நாடே முதன்மை” மற்றும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டங்களின் கீழ் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமான நிதி உதவிக் காசோலைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் 71 பயனாளிகளுக்கு சுமார் 7.16 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகள் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைப்பட்டது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் ஞா.சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்ட 71 பயனாளிகளில் 30 பேருக்கு 150,000/= வீதமும் 17 பேருக்கு 100,000/= வீதமும், 24 பேருக்கு 40,000/= வீதமும் காசோலைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் எஸ்.விநோராஜ், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளர் பிரிதோஸ் நளினி உள்ளிட்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









